30 வயதுக்கு மேல ஆனா டீம்ல எடுக்கமாடீங்களா ? இந்த ரூல்ஸ் யார் போட்டது ? – ஆதங்கத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்

Sheldon
- Advertisement -

ரஞ்சி ட்ராபி தொடர்களில் திறமையாக விளையாடும் பல வீரர்களை, அவர்களின் வயதை காரணம் காட்டி இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் விட்டுவிடுகிறது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு. இந்நிலையில் தேர்வுக் குழுவின் இந்த முடிவை சராமாரியாக விமர்சித்துள்ளார், ரஞ்சி ட்ராபி தொடர்களில் புதுச்சேரி அணிக்காக விளையாடி வரும் வீரரான ஷெல்டன் ஜாக்சன். பரோடா, சௌராஷ்டிரா ஆகிய அணிகளுக்காக இதற்கு முன் விளையாடிய ஜாக்சன், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக கடந்த ஆண்டு புதுச்சேரி அணிக்காக விளையாடும் முடிவை எடுத்தார். 2018-2019 தொடரில் சௌராஸ்டிரா அணியில் விளையாடிய அவர், அந்த தொடரில் 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தி அந்த அணி இறுதிப் போட்டிவரை முன்னேறிச் செல்ல உதவினார்.

Sheldon 1

அதே சிறப்பான ஆட்டத்தை கடந்த தொடரிலும் வெளிக்காட்டி 800 ரன்களுக்கும் மேல் அவர் அடித்திருந்தார். கடந்த இரு சீசன்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள 34 வயதான ஷெல்டன் ஜாக்சனை அவருடைய வயதை காரணம் காட்டி இந்தியா A அணிக்கு கூட தேர்வு செய்யாமல் விட்டிருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இதற்கிடையில் ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், அந்த பேட்டியில் இந்திய தேர்வுக் குழுவைப் பற்றியும் அங்கு கையாளப்படும் எழுதப்படாத விதிமுறையைப் பற்றியும் சராமாரியான விமர்ச்சனத்தை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர்,

- Advertisement -

எனக்கு 34 வயதாகிறது. இருந்தாலும் 23-24 வயதுடைய வீரர்களைவிட நான் நன்றாகவே விளையாடி இருக்கிறேன். இப்படி இருக்கையில் எந்த விதிமுறை என்னை இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று தடுக்கிறது? வயதாகிவிட்டால் அவரை இந்திய அணியில் சேர்க்ககூடாது என்ற ஒரு விதிமுறை உண்மையில் இருக்கிறதா? யார் இதை முடிவு செய்கிறார்கள்? வாயதாகி விட்டால் உடல் தகுதி இல்லாமல் போய்விடுமா. தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று சீசன்களாக 800-900 ரன்கள் அடிக்கும்போதே அந்த வீரர் தகுந்த உடல் தகுதியுடன் இருக்கிறாரென்று தான் அர்த்தம்.

Sheldon

எனக்கு 30 வயதிற்கு மேலாகிவிட்டது என்று சொல்வதை நானே பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய கேள்வி எல்லாம் வயதாகி விட்டால் இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று எழுதப்பட்ட விதி எங்கே இருக்கிறது? என்னுடைய உரிமையை பறிக்கும் நபர்கள் யார்? என்பது மட்டுமே என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ரஞ்சி ட்ராபி தொடர்களில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரராக விளங்கும் ஜெய்தேவ் உனாத்கட்டையும், அவருடைய வயதை காரணம் காட்டி இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் விட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. இதை அவர்களே கூறியதாக உனாத்கட்டின் பயிற்சியாளர் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாளிதழுக்கு பேட்டியாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement