ப்ரித்வி ஷாவுக்கு அளித்த தண்டனை கடுமையானது. அவருக்கு இதனை தண்டனையாக அளித்திருக்கலாம் – முன்னாள் வீரர் கருத்து

Shaw
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா சையது முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மை கொண்ட இருமல் மருந்தினை ப்ரித்வி ஷா உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

Prithvi_Shaw

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ப்ரித்வி ஷாவிற்கு நவம்பர் 15ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ப்ரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால டெண்டுல்கர் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்களை அவர் அடித்துள்ளார். ஒரு சதமும் இந்திய அணிக்காக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை மிகக்கடுமையானது என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது : மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ப்ரித்வி ஷா அவரது வயதை கருத்தில் கொண்டு அவருடைய தண்டனையை குறைத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாதாரண குடும்பத்திலிருந்து வரும் வீரர்கள் ஊக்க மருந்துகள் போன்றவற்றை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Shaw-1

அதனை கிரிக்கெட் அமைப்போ அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமி அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது அவருக்குத் தெரியாது நீங்கள் தான் அவருக்கு அதெல்லாம் புரிய வைத்திருக்க வேண்டும். எனவே அவர்கள் தண்டனையை குறைத்து அவருக்கு நிபந்தனையுடன் போட்டியில் விளையாட வாய்ப்பு அளித்து இருக்கலாம் என்றும் மேலும் மூன்று மாதங்கள் அவருடைய தண்டனைக் காலத்தை குறைத்து இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisement