- Advertisement -
இந்திய கிரிக்கெட்

குஷனை நகர்த்தி ஏமாத்தீட்டாங்க.. சூரியகுமார் பிடிச்சது கேட்ச் இல்ல.. பாக் ரசிகர்கள் விமர்சனத்துக்கு பொல்லாக் பதில்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா மாபெரும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, சிவம் துபே 27 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்காவுக்கு டீ காக் 39, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 31, ஹென்றிச் க்ளாஸென் 52 ரன்கள் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் அவர்களை அவுட்டாக்கிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் 21 ரன்கள் குவித்து சவாலை கொடுத்தார்.

- Advertisement -

பொல்லாக் பதில்:
அதனால் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்ஸர் அடித்தார். அதை லாங் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் கச்சிதமாக பிடித்த பின் பேலன்ஸை இழந்தார். அதனால் பந்தை களத்திற்குள் தூக்கிப்போட்டு விட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்ற அவர் மீண்டும் வந்து சரியாக பிடித்தார்.

அதுவே கடைசியில் மில்லரையும் அவுட்டாக்கி இந்தியாவுக்கு சரித்திர வெற்றி கொடுத்தது. அதனால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் அந்த இடத்தில் பந்தை களத்திற்குள் தூக்கிப்போட்டு விட்டு பவுண்டரிக்குள் செல்லும் போது சூரியகுமார் யாதவ் காலின் நுனிப்பகுதி பவுண்டரி எல்லையில் உரசியதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் ஜூம் செய்யப்பட்ட வீடியோவை காட்டும் அவர்கள் இந்திய அணி அம்பயரை கைக்குள் போட்டு சிக்ஸரை ஏமாற்றி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்ததாக தெரிவித்து வருகின்றனர். அது போக அந்த பந்து வீசுவதற்கு முன்பாகவே பவுண்டரி எல்லை வேண்டுமென்றே சில அடிகள் பின்னோக்கி நகர்த்தி வைக்கப் பட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ் ஆகிருக்கும்.. 41 வருசத்துக்கு முன் கபில் தேவ் செஞ்சதை.. சூரியகுமார் செஞ்சுருக்காரு.. ஸ்டுவர்ட் பின்னி பாராட்டு

இந்நிலையில் இது பற்றி பாகிஸ்தானை சேர்ந்த டைம்ஸ் ஆஃப் கராச்சி எனும் ஊடகம் ஜாம்பவான் ஷான் பொல்லாக்கிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “கேட்ச் நன்றாக இருந்தது. ஃகுஷன் (பவுண்டரி) நகர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் அது விளையாட்டின் போக்கில் இருந்தது. அதற்கும் சூர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் குஷன் மீது நிற்கவில்லை. அவர் பிடித்தது புத்திசாலித்தனமான திறமை” என்று கூறினார்.

- Advertisement -