தற்போதுள்ள கோலியின் அணியை வீழ்த்த இந்த அணியால் மட்டுமே முடியும் – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளராக தனது பணியினை சிறப்பாக செய்து வந்தாலும், முக்கிய உலக கோப்பை தொடர்களில் இவரது பயிற்சியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிகளில் தோல்வி அடைவதாலும், மேலும் அவர் வெளிநாட்டு தொடர்களின் போது வெளியில் சுற்றுவது, மைதானத்தில் தூங்குவது என இருப்பதால் அவர் மீது கேலி கிண்டல் எழுந்து வருகின்றன.

Shastri

- Advertisement -

ஆனாலும் ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி சிறப்பாகவே உள்ளது என்றும் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பேஸ்புக் நேரலையில் பேசிய ரவிசாஸ்திரி விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் திறமை கொண்ட அணி குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : கடந்த 1985 ஆம் ஆண்டு இருந்த இந்திய அணி சிறப்பான அணியாக இருந்தது.

அந்த அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரும் 1983 ஆம் ஆண்டு இருந்த அணியை விட மிகவும் திறமையானவர்கள். எனவே உலக கோப்பையை வென்ற அணியை விட 1985 ஆம் ஆண்டு இருந்த அணி சிறப்பான அணியாக இருந்தது. அந்த அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் எனும் என்று சம அளவில் இருந்ததால் அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர்.

1985

அந்த அணியே தற்போது உள்ள இளம் விராட் கோலியின் அணியை கூட வீழ்த்தும் அளவு திறமை கொண்டது. அதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை அந்த அணி எப்படிப்பட்ட திறமையும் கொண்ட அணியையும் வீழ்த்தும் அணி என்று நான் கூறுவேன். பலரும் 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணி தான் சிறந்த அணி என்று நினைக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் 1985 ஆம் ஆண்டு கவாஸ்கர் தலைமையில் இருந்த அணியே மிக சிறப்பான அணி என்றும் ரவிசாஸ்திரி கூறினார். அது மட்டுமின்றி அந்த ஆண்டு நடைபெற்ற பென்ஷன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார் ரவிசாஸ்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரி மற்றும் ஜாவித் மியான்தத்தின் போட்டி இன்றளவும் மிகச் சிறந்த போட்டியாக பார்க்கப்படுகிறது.

1985 ind

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகவும் டப் கொடுத்ததாகவும் சாஸ்திரி தெரிவித்தார். நியூஸிலாந்து அணியில் பெரிய ஸ்டார்கள் இல்லை என்றாலும் அந்த அணி மிகச் சிறப்பானதாகும் கடினமான அந்த அணியை அரையிறுதியில் வீழ்த்தியதாகவும் சாஸ்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்து.

Advertisement