சச்சின் ஒரு பேட்ஸ்மேனாக ஜெயித்தாலும் இந்த ஒரு விடயத்தில் தோற்று விட்டார் – சசி தரூர் ஓபன் டாக்

Tharoor

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடியவர் அவர் ஆடிய காலத்தில் இவர் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த அவர் மேலும் தனது காலத்தில் ஜாம்பவான்களாக இருந்த கிளன் மெக்ராத், முத்தையா முரளிதரன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மிட்சல் ஜான்சன், அக்தர், வார்னே போன்ற அசாத்தியமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுதான் பல சாதனைகள் படைத்தார். சர்வதேச அளவில் 35 ஆயிரம் ரன்கள் குவித்த ஒரே வீரர் இவர்தான் மேலும் சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான்.

Sachin 1

இப்படி பல அசாத்தியமான சாதனைகளை சச்சின் டெண்டுல்கரின் தலையில் அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அவரால் ஒரு மிகச் சிறந்த தலைவராக(கேப்டனாக) அணியில் இருக்க முடிந்ததில்லை என்பதுதான் உண்மை. பலரும் பல்வேறு காலகட்டத்தில் இதனை ஆணித்தனமாக அடித்து நிரூபித்து இருக்கின்றனர். அவருக்கு தலைமை பொறுப்பு வந்த போதெல்லாம் அதை தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேரளாவைச் சேர்ந்த சசிதரூர் இதனைப் பற்றி பேசியிருக்கிறார். இவர் ஒரு கிரிக்கெட்டின் தீவிர விசிறி அவர் சச்சின் டெண்டுல்கரை பற்றி பேசுகையில்…. சச்சின் டெண்டுல்கர் நான் பார்க்கும் போது மிகச் சிறப்பாக வேண்டும் விளையாட்டு வீரராக இருந்தார்.

மேலும் அவர் தலைசிறந்த வீரராக மாறிய பின்னர் மிகச்சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். களத்தில் அந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பார். ஆனால் அவர் கேப்டனாக வந்ததும் அனைத்து மாறியது. உண்மையை சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருக்கும் போது அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இல்லை.

- Advertisement -

அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கரும் அந்த பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்பட தவறிவிட்டார். மேலும் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த அவர் விரும்பிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக மகிழ்ச்சியோடு கேப்டன் பதவியை துறந்தார். மீண்டும் கேப்டன் பதவி தன்னை தேடி வந்தபோது வேண்டாம் என்று சொன்னவர் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஷி தரூர்

sachin ganguly 2

இவர் சொல்வது உண்மைதான். சச்சின் டெண்டுல்கர் 98 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இந்தியா வெறும் 27 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் கூறியபடி சச்சின் ஒரு பேட்ஸ்மேனாக ஜெயித்தாலும் கேப்டனாக தோற்றுவிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மை என்றே தோன்றுகிறது.