இளம் வேகப்பந்துவீச்சாளர் பெற்றோர் விபத்தில் காயம்..! மும்பைக்கு பறந்த சென்னை வீரர் ?

thakur
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியில் சென்னை அணியில் விளையாடிவரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான சர்துல் தாக்கூரின் பெற்றோர்கள் மும்பையில் ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

- Advertisement -

ஐபில் 11 ஆம் சீசனில் விளையாடிவரும் சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார் சர்துல் தாக்கூர். மும்பையை சேர்ந்த இவர் இந்த ஆண்டு சென்னை அணியால் 2.6 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை இந்த ஐபில் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் இவரது பெற்றோர்கள் விபத்தில் சிக்கியுள்ளதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் சர்துல் தாக்கூர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் மும்பை, பல்ஃகார் பகுதியில் ஷர்துள் தாகூரின் தந்தை நரேந்திர தாகூரும், தாய் ஹன்சா தாக்கூரும் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக வாகனம் ரோட்டில் சறுக்கி இருவரும் கிழே விழுந்துள்ளார்.

csks

பின்னர் இருவரையும் அந்த பகுதியில் இருந்த காவல் துறை நபர்கள் சிலர் அவர்களை உடனடியாக அருகில் இருந்த டவ்லே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது நலமாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Advertisement