ஒரு சின்ன வித்தியாசத்தால் நடராஜனிடம் இருந்து வாய்ப்பினை தட்டிப்பறித்த வீரர் – விவரம் இதோ

Nattu

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

Siraj-1

ஏனெனில் முதல் போட்டியின் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் முகமது ஷமியை இழந்து நின்றது. இதனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று அனைவரும் விமர்சித்த நிலையில் ரகானே தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு மற்றொரு இழப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசிய உமேஷ் யாதவ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி நிலையில் வெளியேறினார். ஏற்கனவே முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இல்லாத நிலையில் தற்போது சமயம் உமேஷ் யாதவும் வெளியேறியதால் யார் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Nattu-1

முன்னதாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் முதல் இரு வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனாலும் மூன்றாம் இடத்திற்கு யார் விளையாடுவார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு போட்டி போடும் இடத்தில் நடராஜன், சைனி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இருந்தனர். இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது ஷர்துல் தாகூர் தான் மூன்றாவது போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடராஜன் முதல்தர போட்டிகளில் அதிக அளவு அனுபவம் இல்லாதவர். ஆனால் ஷர்துல் தாகூர் முதல் தரப் போட்டிகளில் பல போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உடையவர் என்ற ஒரே காரணத்திற்காக பிசிசிஐ அவரை தான் தேர்வு செய்து அணியில் விளையாட வைக்கும் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.