இங்கிலாந்து ஒருநாள் தொடர்..! இந்திய அணி மாற்றம்..! CSK வீரர் அணியில் சேர்ப்பு..! – யார் தெரியுமா..?

bumrah
Advertisement

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள ஒரு நாள் தொடரில் பும்ப்ரா களமிறங்க உள்ளார்.
shardul
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான முதலாவது டி20 போட்டியில் இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் பும்ராவிற்கு பதிலாக இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரில் இளம் வீரர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டிருந்தார். பும்ராவுக்கு கையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

காயம் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதால் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்குள் பும்ரா தயாராகி விடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதற்காக மருத்துவக்குழு அவரின் காயத்தை குணப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல, வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக டி20 போட்டியில் குர்னல் பாண்டியா சேர்க்கப்பட்டு இருந்தார்.
bumrah
தற்போது மூன்று டி20 போட்டிக்கு பின்னர் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். அதையடுத்து வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டித் தொடருக்கு முன்பாக பும்ரா அணியில் சேர்ந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத் தெரிவிக்கையில்
“கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ராவுக்கு லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வந்தது. அவருக்குப் பதிலாக ஒருநாள் போட்டிக்கான அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

* விராட் கோலி
* ஷிகர் தவண்
* ரோகித் சர்மா
* கே.எல். ராகுல்
* ரேயாஸ் அய்யர்
* சுரேஷ் ரெய்னா
* எம்எஸ் தோனி
* தினேஷ் கார்த்திக்
* யுவேந்திர சாஹல்
* குல்தீப் யாதவ்
* அக்ஸர் படேல்
* புவனேஷ்வர் குமார்
* சர்துல் தாக்கூர்
* ஹர்திக் பாண்டியா
* சித்தார்த் கவுல்
* உமேஷ் யாதவ்.

Advertisement