சி.எஸ்.கே அணி ஒரு சாதாரண டீம் மட்டும் இல்ல..அதுக்கும் மேல – ஷர்துல் தாகூர் அளித்த நெகிழ்ச்சி பேட்டி இதோ

Shardul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷர்துல் தாகூர் அண்மையில் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேளையில் உள்ளூர் தொடரான ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். குறிப்பாக தமிழ்நாடு அணிக்கெதிரான அரையிறுதி போட்டியின் போது சதம் அடித்த அவர் இறுதி போட்டியிலும் முக்கியமான நேரத்தில் 37 ரன்களை குவித்தார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடுகள் காரணமாக ரஞ்சி கோப்பையில் மும்பை அணி மீண்டும் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ரஞ்சி தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அதோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் அவர் இந்திய அணிக்கு கம்பாக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடிய ஷர்துல் தாகூர் 2022-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காகவும் 2023-ஆம் ஆண்டு கே.கே.ஆர் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவது குறித்து பேசியுள்ள ஷர்துல் தாகூர் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்தது.

- Advertisement -

தற்போது தோனியின் தலைமையின் கீழ் மீண்டும் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் விளையாடினால் நம்மால் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று நம்மிடம் இருக்கும் தவறுகளையும் நம்மால் திருத்திக் கொள்ள முடியும். ஸ்டம்பிற்கு பின்னால் நின்று அவர் கொடுக்கும் அறிவுரைகளும் சுதந்திரமும் நம்மை சிறப்பான ஒரு வீரராக மாற்றும்.

இதையும் படிங்க : அந்த பேங்க் பேலன்ஸ் இருந்தாலும்.. 2024 டி20 உ.கோ வாய்ப்புக்கு விராட் கோலி அதை செஞ்சாகனும்.. டேல் ஸ்டைன்

சிஎஸ்கே அணி ஒரு சாதாரண டீம் கிடையாது. அது ஒரு குடும்பம் போன்றது. குடும்ப கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அணியாக என்றுமே சிஎஸ்கே அணி இருந்து வருகிறது. நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நான் முன்னேற்றத்தை காண இருக்கிறேன் என ஷர்துல் தாகூர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement