20 ஆவது ஓவரை வீசும்போது இதை நினைத்துதான் வீசினேன் – ஆட்டநாயகன் தாகூர் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டி சூப்பர் ஓவரை செல்ல முக்கிய காரணமே வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்தான் என்று கூறலாம். பேட்டிங்கில் 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் நேற்று அவர் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக அவர் வீசிய 20 ஓவரில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் அவர் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 ரன்அவுட்டுடன் 4 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்தார். இதனால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

Thakur 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் தாகூர் கூறியதாவது : இதைவிட வேறு ஏதும் நீங்கள் கேட்க முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளோம். இதுபோன்ற நகம் கடிக்கும் இறுதி பினிஷிங் போட்டிகளை கொடுத்து வருகிறோம். கடந்த போட்டிக்கு பிறகு நாங்கள் சில விடயங்களை கற்றுக் கொண்டோம். எப்பொழுது நம்பிக்கை விடக்கூடாது. அந்த நம்பியை இறுதிவரை இழக்காமல் பந்துவீசியதாலே என்னால் பதட்டமில்லாமல் பந்துவீச முடிந்தது.

Thakur

மேலும் நான் பந்தை டாட் பால் வீசும்போதும், விக்கெட் வீழ்த்தும் போதும் அவர்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதை உணர்கிறேன். அதனை பின்பற்றி பந்து வீசியதால் சிறப்பாக வீசமுடிகிறது. மேலும் பேட்டிங்கில் இன்னும் பாட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் அடுத்த முறை அனைத்தும் துறைகளிலும் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நினைக்கிறேன் என்று தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement