ஓவல் டெஸ்டில் நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் – ஷர்துல் தாகூர் ஓபன்டாக்

Thakur-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளதால் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் திகழ்ந்தார் என்றால் அது மிகை அல்ல.

Thakur 4

- Advertisement -

ஏனெனில் முதல் இன்னிங்சின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது 36 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் விளாசி இந்திய அணியை 191 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். அதேபோல இரண்டாவது இன்னிங்சிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 72 பந்துகளில் 60 ரன்கள் குவித்து மீண்டுமொருமுறை இந்திய அணியின் முன்னிலைக்கு காரணமாக அமைந்தார்.

அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் முக்கிய விக்கெட்டுகளாக இரண்டாவது இன்னிங்சில் தொடக்க வீரர் விக்கெட்டையும், ஜோ ரூட் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனையை தந்தார். இப்படி பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் அசத்திய இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது தான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட என்ன காரணம் என்பது குறித்து தற்போது ஷர்துல் தாகூர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

thakur 2

உண்மையிலேயே இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நான்காவது போட்டியில் விளையாடுவேன் என்பது போட்டிக்கு முன்னர் வரை எனக்கு தெரியாது. இருப்பினும் நான்காவது போட்டியில் வாய்ப்பு கிடைத்த போது நிச்சயம் இந்த போட்டியில் வெற்றிபெற என்னுடைய பங்களிப்பு நான் வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி போட்டியின் ஐந்தாவது நாளில் நாங்கள் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியே.

Thakur

இந்த போட்டியில் பேட்டிங்கில் 100 ரன்களுக்கு மேல் பங்களித்த நான் பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். எனது பேட்டிங் இந்த போட்டியில் சிறப்பாக இருக்க காரணம் யாதெனில் : எப்போதும் நான் என்னுடைய பேட்டிங் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். பந்துவீச எவ்வளவு பயிற்சி எடுக்கிறேனோ அதே போன்று வலைப்பயிற்சியில் பேட்டிங்கிலும் தேவையான அளவு பயிற்சி எடுத்து வருகிறேன். எப்போதுமே பேட்டிங்கின் மீது உள்ள ஆர்வத்தால் அதற்கும் நேரத்தை ஒதுக்கி வருகிறேன். இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது என தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement