இங்கிலாந்து அணிக்கெதிரான என்னுடைய அதிரடியான பேட்டிங்கிற்கு காரணம் இதுதான் – ஷர்துல் தாகூர்

Thakur-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி (நேற்று) லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் தனது அதிரடி மூலம் அரை சதம் விளாசி அசத்தினார்.

indvseng

- Advertisement -

ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து வெறியேற்ற ஒரு கட்டத்தில் இந்திய அணியானது 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

இதில் மூன்று பிரமாண்டமான சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் தனது அதிரடி குறித்து பேட்டி அளித்த ஷர்துல் தாகூர் கூறுகையில் : இங்கிலாந்து மண்ணில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின்றன. இதன் காரணமாகவே பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்து விடுகின்றனர்.

thakur 1

இதுபோன்ற மைதானங்களில் கிராஸ் பேட் ஷாட்டுகளை ஆடுவதை விட ஸ்ட்ரைட் பேட் ஷாட்டுகளை ஆடினால் நிச்சயம் ரன்கள் நமக்கு கிடைக்கும். இந்த முதலாவது இன்னிங்சில் நான் ஸ்ட்ரைட் பேட் மூலமாகவே ரன்களை சேர்க்க நினைத்தேன். மேலும் அணி இருந்த சூழலில் எனது அதிரடி தேவை என்பதனால் நான் என்னுடைய அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினேன் என ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.

Thakur

அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ்க்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் அரைசதமாகவும் ஷர்துல் தாகூரின் இந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement