வான்கடேவில் ரோஹித்தை வெச்சு தான் பிளானே போட்டோம்.. பதிரனா யார்கர் வேற லெவல்.. தாக்கூர் பேட்டி

Shardul Thakur
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. ஏப்ரல் 14ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20* ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதமடித்து 105* (63) ரன்கள் குவித்து போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம் சூரியகுமார் யாதவ், கேப்டன் பாண்டியா உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 20 ஓவரில் மும்பையை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரோஹித்தை வெச்சு:
இந்நிலையில் இப்போட்டியில் துபே, ருதுராஜ், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக சர்துல் தாக்கூர் பாராட்டியுள்ளார். மேலும் வெற்றியை தீர்மானித்த பதிரனாவின் யார்க்கர் பந்துகள் அபாரமாக இருந்ததாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை விட வான்கடே மைதானத்தின் பெரிய பகுதியில் “முடிந்தால் அடித்து பாருங்கள்” என்ற வகையில் ஃபீல்டிங்கை செட்டிங் செய்து ரோஹித்துக்கு எதிராக திட்டமிட்டு பந்து வீசியதாக தாக்கூர் கூறியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றியால் மகிழ்ச்சி. வான்கடேவில் மும்பைக்கு எதிராக வெல்வது கடினம். மும்பை – சென்னை போட்டிகள் எப்போதும் தரமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ரோஹித், ருதுராஜ், துபே சிறப்பாக பேட்டிங் செய்தனர். எங்களுடைய பதற்றத்தை கட்டுப்படுத்திய நாங்கள் வெற்றி கண்டோம். நாங்கள் பந்து வீச விரும்பும் இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்துவதைப் பற்றி பேசினோம்”

- Advertisement -

“எனவே ஃபீல்ட்டுக்கு தகுந்தார் போல் பேட்ஸ்மேனை விட சாதுரியமாக பந்து வீசுவதே எங்களுடைய எளிய திட்டமாகும். பதிரனாவை தவிர்த்து எங்களுடைய மற்ற பவுலர்கள் வேகத்தை குறைக்க வேண்டும் என்று உணர்ந்தோம். அவருடைய யார்க்ர்களை பார்த்தது அபாரமாக இருந்தது. வான்கடே மைதானத்தில் இலக்கை கட்டுப்படுத்துவது கடினம்”

இதையும் படிங்க: பவர் பிளேவில் தோனி பாய் சொன்ன அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. ஆட்டநாயகன் பதிரனா பேட்டி

“ரோஹித் நன்றாக பேட்டிங் செய்த போது போட்டி கை மீறி செல்வது போல எங்களுக்கு தோன்றியது. இருப்பினும் அந்த இடத்தில் நான் சற்று தைரியமாக அவரை மைதானத்தின் பெரிய பகுதியில் அடிக்க விடலாம் என்று கருதினேன். ஒருவேளை அதை பயன்படுத்தி பவுண்டரி அடித்தால் அவருக்கு முழு மதிப்பெண். அதை அவர் தவற விட்டால் போட்டி எங்கள் பக்கம் திரும்பும் என்பதே திட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement