இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங்கில் அசத்திய இந்திய பவுலர் – பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது துவக்கம் முதலே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் ரோஹித் 127 ரன்களும், ராகுல் 46 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் வந்த புஜாரா 61 ரன்கள் குவிக்க கோலி 44 ரன்கள் குவித்தார்.

pujara

- Advertisement -

பின்னர் ஜடேஜா மற்றும் ரஹானே ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேற பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் ஜோடி சிறப்பாக விளையாடியது. அரை சதம் அடித்த ரிஷப் பண்ட் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஷர்துல் தாகூர் 72 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆட்டமிழக்க தற்போது 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Thakur-3

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்த ஷர்துல் தாகூர் மீண்டும் ஒருமுறை இந்த இரண்டாவது இன்னிங்ஸ்ஸிலும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறி வரும் இந்த மைதானத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த தாகூர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தார்.

மேலும் அவரது இந்த ஆட்டத்திற்கு தற்போது பல தரப்பிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement