காயத்தால் மே.இ தொடரில் விலகிய புவனேஷ்குமார் பதிலாக இவரே விளையாடுவார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Bhuvi-1

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நாளை சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஏற்கனவே இந்திய அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மேலும் இந்திய அணிக்கு ஒரு சறுக்கலாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பல மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை எடுத்து வந்த புவனேஸ்வர் குமார் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் தான் இந்திய அணியுடன் இணைந்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மீண்டும் காயம் அடைய அவர் தற்போது அணியில் இருந்து விலகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

shardul

இந்நிலையில் தற்போது காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு அவர் தேர்வாக வேண்டும் என்றால் இந்த தொடரில் சிறப்பாகப் பந்துவீசி மூலம் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தினாலே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறபடுகிறது.

- Advertisement -