நாளைய இறுதிப்போட்டியில் இவர் இந்திய அணியில் விளையாடமாட்டாராம் – வெளியான தகவல்

Samson-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமன் நிலை உள்ளது. இந்நிலையில் தொடர முடிவு செய்யும் இறுதிப் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

Khaleel

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது யாதெனில் தொடக்க வீரர் ஷிகர் தவான் சரியாக விளையாடாவிட்டாலும் அவரை உடனடியாக தூக்க முடியாது. ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்த வீரர் ரோகித் மற்றும் தவான் ஜோடி எப்போதுமே சிறப்பாக விளையாடி வந்துள்ளது.எனவே அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பார்.

கங்குலியின் ஆதரவோடு பண்ட் மீண்டும் அணியில் நீடிப்பார்கள் என்றும் தெரிகிறது. இப்போதுள்ள அணியில் கலீல் மட்டுமே பந்துவீச்சில் சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் மோசமாக பந்துவீசி தோல்விக்கு காரணமாக அமைந்த கலீல் அஹமது இரண்டாவது போட்டியிலும் 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

Khaleel

எனவே அவரை இறுதிப் போட்டியில் இருந்து தூக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாட வைக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே நாளைய போட்டியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -