இந்திய ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் கடந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக இறுதியில் இறங்கி அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்களை சேர்த்தார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் போது இறுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இரண்டாவது பாதியில் விளையாடவில்லை. அவருக்கு பந்து தலையில் பட்டு மூளை அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என அவருக்கு பதிலாக சாஹல் மாற்று வீரராக விளையாடினார்.

இந்நிலையில் அதோடு சேர்த்து பேட்டிங் செய்யும் போதும் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு காயம் அதிகரித்துள்ளதால் அவர் குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளிலும் ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

jadeja 1

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிசிசிஐ குறிப்பிட்டதாவது : அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இன்னும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். எனவே தாகூர் உடனடியாக டி20 அணியுடன் இணைந்து அவர் பயிற்சியை மேற்கொள்வார் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

jadeja 4

மேலும் ஜடேஜா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு அணியினருடன் இணைந்து பயிற்சியும் மேற்கொள்வார் என்று தெரிகிற.து இதன் காரணமாக ஒருநாள் அணியில் விளையாடிய ஷர்துல் தாகூர் தற்போது டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement