இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்று துவங்கியது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று முடிவு செய்தார். மேலும் இந்திய அணியில் இரு மாற்றங்களாக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமிக்கு பதிலாக சைனியும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹலும் அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த போட்டியில் 9 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தாகூர் சென்ற போட்டிக்கு பிறகு அதிகம் விமர்சிக்கப்பட்டார். மேலும் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக சைனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி வீரர் ஷமிக்கு பதிலாக சைனி இந்த போட்டியில் விளையாடி வருகிறார்.

மேலும் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதால் தொடர் வாய்ப்புகளை பெற்று வரும் தாகூர் நிறைய ரன்களை பவுலிங்கில் விட்டுக் கொடுத்தாலும், முக்கியமான போட்டிகளில் விக்கெட் வீழ்த்தி அசத்துகிறார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அருமையான கடைசி ஓவரை வீசி சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது.

அதேபோல முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இப்போது இரண்டாவது போட்டியில் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி வரும் தாகூர் 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் இதில் முக்கிய விடயம் யாதெனில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் யாரும் மெய்டன் வீசாத இந்த போட்டியில் அவர் மட்டும் ஒரு மெயின் ஓவர் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.



