பயிற்சி போட்டி முடிந்த பின்னர் தீவிர பேட்டிங் பயிற்சி எடுத்த இந்திய பவுலர் – வியந்து போன ரவி சாஸ்திரி

Rohith
- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியானது இன்ட்ரா ஸ்குவாட் எனப்படும் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடும் பயற்சிப் போட்டியில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒரு அணியிலும் பௌலர்கள் அனைவரும் மற்றொரு அணியிலும் இடம்பிடித்திருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்காத இந்திய அணியின் பவுலர் ஒருவர் செய்த செயல் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியிடம் மட்டுமல்லாமல் மற்ற வீரர்களிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியருக்கிறது.

ind

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு பவுலராக மட்டுமல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூருக்கு, இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் சென்றிருக்கிறது. இதனால் பேட்டிங் விளையாட ஏங்கிக் கொண்டிருந்த ஷர்துல் தாக்கூருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆனாலும், இந்த போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றபோது, அவர் மட்டும் பேட்டிங் பேடை கட்டிக்கொண்டு வலைப் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் தனியாக பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரிஷப் பன்ட் அதை ரவி சாஸ்திரியிடம் தெரிவிக்க, அவர் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து வீரர்களும் ஷர்துல் தாக்கூரின் இந்த செயலை ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்திருக்கின்றனர்.

Thakur 1

இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு வருடங்களாகவே பந்து வீசுவதை நிறுத்தி விட்டார். எனவே அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை டெஸ்ட் அணிக்கான ஆல்ரவுண்டராக மாற்ற இருக்கிறோம் என்று இதற்கு முன்னரே இந்திய அணயின் பந்து வீச்சு பயிற்சியாளரான பரத்த அருண் கூறியிருக்கிறார். தற்போது ஷர்துல் தாக்கூரின் இந்த செயலைப் பார்க்கும்போது,

Thakur

ஆல்ரவுண்டராக மாறுவதற்கு அவர் அதிக மும்மரம் காட்டி வருகிறார் என்றே தோன்றுகிறது. நாளை மறுதினம் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் அடங்கிய அணியை இந்தியா தற்போது அறிவித்துள்ளது. ஆனால் இந்த அணியில் ஷர்துல் தாக்கூருக்கு இடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement