உண்மையாவே இவர் பந்துவீச்சாளர் தானா ? பேட்டிங்கில் இந்த சாத்து சாத்தூரார் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Thakur

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Rahul

இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்தியா விளையாடி முடித்துள்ளது.

இந்த போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்கள். அதன் பின்னர் மூன்றாவதாக களமிறங்கிய சாம்சன் அபாரமாக சிக்ஸ் அடித்து தொடங்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் ஐயரும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மனிஷ் பாண்டே மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினர்.

Thakur 1

இந்நிலையில் கடைசி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் என்று கூறலாம். 8 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்களை குவித்து அசத்தினார். இவரது பேட்டியை பார்க்கும்போது ஒரு பேட்ஸ்மென் எவ்வளவு சிறப்பாக அந்த அளவிற்கு இருந்தது. ஏற்கனவே கடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் விளையாடி அவர் இந்திய அணிவெற்றி தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.க்கு

- Advertisement -