நாளைக்கு இருக்க மாட்டேன்னு சொல்லி விராட், ரோஹித், எங்களை வளத்தாரு.. தோனி பற்றி சர்துள் தாகூர் 

Shardul Thakur
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மிகச்சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். 2004இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அதிரடியாக விளையாடத் துவங்கிய அவர் இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தார். அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய தோனி 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று காட்டினார்.

அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறிய இந்தியா 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்றது. அத்துடன் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களை வைத்து தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் தோனி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

எங்களை வளத்தாரு:
மேலும் 5 ஐபிஎல், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று வெற்றிகரமான கேப்டனாக திகழும் அவர் சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். அத்துடன் தற்போதைய அணியில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற பெரும்பாலான வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறிய போது தேவையான வாய்ப்பு ஆதரவையும் கொடுத்து வளர்த்த தோனி இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தையும் சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர்.

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு தோனி முக்கிய காரணமாக இருந்ததாக சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியுடன் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷல். ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எங்களுடைய சொந்தத் திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார்”

- Advertisement -

“அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை ஊட்டி விட மாட்டார். குறிப்பாக “நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்” என்று தோனி எங்களிடம் சொல்வார்”

இதையும் படிங்க: ஏபி டீ வில்லியர்ஸ்க்கு சமமாக தென் ஆப்பிரிக்காவில்.. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்த கெளரவம்

“3 ஐசிசி கோப்பைகளை வென்று பல இளம் வீரர்களை வளர்த்ததில் தோனி தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோஹித் போன்றவர்கள் கூட ஆரம்பக் காலத்தில் நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்எஸ் தோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement