- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதெல்லாம் வரும் போகும்.. ஆனா கெளதம் கம்பீர் மாதிரி பயிற்சியாளர் கிடைக்க மாட்டாங்க.. தாக்கூர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. அத்தொடருக்கு முன்பாக விராட் ரோஹித் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதனால் இங்கிலாந்து தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முடிந்தளவுக்கு போராடி தொடரை சமன் செய்து அசத்தியது.

ஒருவேளை அத்தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார் என்றே சொல்லலாம். ஏனெனில் அவர் பயிற்சியாளராக வந்த பின் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஒயிட் வாஸ் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் 10 வருடங்கள் கழித்து பாரடர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது.

- Advertisement -

விமர்சனங்கள் வரும் போகும்:

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில்
20 விக்கெட்டுகளை எடுக்க குல்தீப் யாதவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் கடைசி வரை அதைக் கேட்காத கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த சுந்தர் மற்றும் ஜடேஜாவை தேர்ந்தெடுத்தார்.

எனவே கௌதம் கம்பீர் பிளேயிங் லெவனை சரியாக தேர்வு செய்திருந்தால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் விமர்சனங்கள் வந்து போகும் என்பதால் அதற்காக கவலைப்படக்கூடாது என இந்திய வீரர் சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் போன்ற போராடும் குணம் கொண்ட பயிற்சியாளர் இந்திய அணிக்கு கொடுக்க முத்வேகம் அனைவரிடமும் கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் உத்வேகம் கிடைக்காது:

அந்த வகையில் பயிற்சியாளராக கம்பீர் அணிக்கு தேவையானதை செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு வீரராக கௌதம் கம்பீர் எப்போதும் அணிக்காக சண்டையிடத் தயாராக இருப்பதை நாம் பார்த்துள்ளோம். அணி மீட்டிங்கில் கூட அவர் தனது விளையாடிய காலத்தில் வெளிப்படுத்திய அதே எனர்ஜியை வீரர்களிடம் கொண்டு வருகிறார்”

இதையும் படிங்க: இந்தியா போன்ற எதிரணிகளை வீழ்த்தி.. ஆசிய கோப்பை வெல்ல அந்த 2 வெற்றி திட்டமே போதும்.. வங்கதேச வீரர் பேட்டி

“சாதனையாளரான அவர் நாட்டுக்காகவும் தன்னுடைய மாநிலத்துக்காகவும் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த அனைத்து அனுபவத்தையும் கொண்டு வரும் அவர் எங்களுடைய அணிக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறார். விமர்சனங்கள் வந்து போகும். ஆனால் ஒரு அணியாக வெற்றி பெறுவது முக்கியம். அந்த வகையில் நாங்கள் சரியான திசையை நோக்கி நகர்வதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -