ஹர்டிக் பாண்டியா வந்துட்டாரு, அவரளவுக்கு ஷார்துல் தாகூர் ஆல்-ரவுண்டர் கிடையாது – நியூஸிலாந்து வீரர் கருத்து

Hardik Pandya Shardhul Thakur
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியன்று துவங்கியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது. குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரின் கோப்பையை வென்று மிகச்சிறந்த கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்தியாவுக்கு நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட அவர் 2019 உலக கோப்பைக்கு பின்பாக ஏற்பட்ட காயத்தால் பந்து வீச முடியாமல் தவித்து வந்தார்.

Hardik Pandya 1

- Advertisement -

அதிலும் 2021 டி20 உலக கோப்பையில் பந்துவீசாமல் பேட்டிங்கிலும் தடுமாறிய அவரை தேர்வு குழு அதிரடியாக நீக்கியது. இருப்பினும் அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளை எடுத்து அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கம்பேக் கொடுத்த அவர் அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அத்துடன் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்தியா வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

பாண்டியா வந்துட்டாரு:
அதனால் அதே பழைய பாண்டியா டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நல்ல பார்முக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக் குழுவும் நிம்மதி அடைந்துள்ளது. ஏனெனில் அவர் இல்லாத நிலைமையில் ஆல்-ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா இருந்தாலும் அவர் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருப்பதால் வேகப்பந்து வீச்சு துறை சற்று பலவீனமாக இருந்தது. அதன் காரணமாக சமீப காலங்களில் ஷர்துல் தாகூர், தீபக் சஹர் போன்ற வீரர்களை இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்து பார்த்த நிலையில் அதில் யாருமே பாண்டியா அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

Thakur

குறிப்பாக அவரைப்போலவே சற்று அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஷர்துல் தாகூர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாராகவே செயல்பட்டார். கடந்த ஜனவரியில் நடந்த தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் இந்தியா தடுமாறிய போது 50* (40) ரன்கள் குவித்ததை தவிர பெரிய இன்னிங்ஸ் ஆடாத அவர் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குபவராக வலம் வருகிறார்.

- Advertisement -

ஆல்-ரவுண்டர் கிடையாது:
அந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் அவரின் இடத்தில் வாய்ப்பு பெற்றாலும் பாண்டியா அளவுக்கு ஷர்துல் ஆல்-ரவுண்டராக இல்லை என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்த தொடருக்கு முன்பாக அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

thakur 1

“ஷார்துல் தாகூர் கணிசமாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார் என்பது மட்டுமே அவருக்கு சாதகமான அம்சமாகும். ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர் இல்லாத நிலைமையில் வேண்டுமானால் அவசரத்துக்கு அவரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்தலாம். ஆனால் உண்மையாகவே அவர் ஆல்-ரவுண்டர் கிடையாது. அதுவும் ஹர்டிக் பாண்டியா அளவுக்கு அவர் சிறந்த ஆல்ரவுண்டர் என்று நான் நம்பவில்லை. எனவே ஆல்- ரவுண்டர்கள் இடத்தில் அந்த 2 பேரும் உங்களுக்கு தேவையா?” என்று கூறினார்.

அதாவது பாண்டியா இல்லாத சமயத்தில் அவசரத்திற்கு வேண்டுமானால் ஷார்துல் தாக்கூர் உதவலாம். ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் நிச்சயமாக ஆல்-ரவுண்டராக செயல்படும் அளவுக்கு அவரிடம் திறமைகளும் இல்லை இதுவரை நிரூபிக்கவும் இல்லை என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

Styris 1

“வேண்டுமானால் இந்திய அணியில் முதல்தர வீரர் இல்லாத சமயத்தில் பேக் அப் இடத்திற்கு அவர் போட்டி போடலாம். ஏனெனில் ஹர்திக் பாண்டியா நிறைய இன்னிங்சில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அவரிடம் அதிரடியான பவுண்டரிகளை அடிக்கும் திறமையும் கடைசி நேரத்தில் களமிறங்கி பினிஷிங் செய்யும் திறமையும் உள்ளதால் அவரை தான் நீங்கள் முதன்மை வீரராக விரும்புவீர்கள்” என்று கூறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துள் தாகூர் 11 இன்னிங்சில் 205 ரன்களை 34.17 என்ற சராசரியிலும் 25 விக்கெட்களை 6.65 என்ற எகானாமியில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement