
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லாததால் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக அமைய இருப்பதனால் இந்த தொடரில் இருந்தே வெற்றியுடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் முழு வீச்சுடன் தயாராகி வருகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூரும் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : இந்த இங்கிலாந்து தொடர் நிச்சயம் இந்திய அணிக்கு வித்தியாசமான சவால்களை அளிக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த தொடரில் விளையாட உள்ளது உற்சாகமாக இருக்கிறது.
இங்கிலாந்தில் நிலவும் வானிலையை பொறுத்தவரை சில நேரங்களில் வானம் மேகமூட்டமாகவும், சில நேரங்களில் சூரியன் பிரகாசமாகவும் இருக்கும். இதன் காரணமாக இங்குள்ள சீதோஷ்ன நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை தகவமைத்துக்கொண்டு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய அணியில் தற்போது இருக்கும் புதிய ஆற்றல் நமக்கு ஒரு நல்ல விடயம் தான்.
இந்த தொடரில் நிறைய இடம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே தங்களது திறமையை நிரூபிக்கும் வகையில் அனைவரும் விளையாட இருப்பது உற்சாகமளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இம்முறை இந்த இங்கிலாந்து மண்ணில் இளம் வீரர்களுடன் எங்களால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலி இல்லாமல் நடைபெறும் இந்த தொடரில் நிச்சயம் நாங்கள் அதனை மிஸ் பண்ணுவோம் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி
அப்படி நாங்கள் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நிச்சயம் இது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான ஒரு வெற்றியாக அமையும். வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றுவது என்பது எப்போதுமே சிறப்பான ஒரு விடயமாகும். அந்த வகையில் இந்த தொடரையும் வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.