2 இன்னிங்சிலும் அரைசதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷர்துல் தாகூர் – படைத்த சாதனை

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளையில் இந்திய அணி அவர்களை இன்றைய போட்டியில் வீழ்த்தி விட்டால் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இரு அணிகளுக்கும் சரி சமமான நிலையில் தான் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

robinson 1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட ஷர்துல் தாகூர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினார். முதல் போட்டியில் 36 பந்துகளில் 57 ரன்களையும் இரண்டாவது போட்டியில் 72 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் அவர் இந்திய அணியின் சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் டெஸ்ட் போட்டியில் 8 ஆவது வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் அரை சதம் விளாசிய 6 ஆவது வீரர் என்ற சாதனையை அவர் உலக அளவில் படைத்துள்ளார்.

Thakur

இந்திய அணி சார்பாக ஏற்கனவே விருத்திமான் சஹா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அடுத்து இந்திய அணி சார்பாக மூன்றாவது வீரராக ஷர்துல் தாகூர் எட்டாம் இடத்தில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் அரை சதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement