ஷர்துள் தாகூர் உட்பட 3 வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கும் கிரிக்கெட் நிர்வாகம் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு எந்த ஒரு விளையாட்டும் விளையாட முடியாதபடி இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ விளையாட்டு வீரர்களை தனிப்பட்ட முறையில் பயிற்சியை துவக்க அனுமதி அளித்தது. மேலும், விளையாட்டு ஆணையமும் தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் வீட்டிற்குள்ளேயே அரங்கு அமைத்து பயிற்சி செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது.

Thakur 3

ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூர் நான்காம் கட்ட ஊரடங்கின் போது பொதுவெளியில் வந்து பயிற்சி செய்த வீடியோ வைரலாகியுள்ளது. மேலும், அவர் பயிற்சி செய்த மும்பையின் பால்கர் பகுதி சிவப்பு மண்டலமாகும். இந்த இடத்தில் பயிற்சி செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக விதிமுறையை மீறி வெளியில் வந்து பயிற்சி செய்த, ஒப்பந்தத்தில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாகூர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. சர்துல் தாகூர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் சி பிரிவில் இருக்கிறார் இவருக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 3 வீரர்களையும் விசாரிக்க உள்ளதாக மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Thakur

கடந்த 2 மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் மேலும் பல தொடர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பி.சி.சி.ஐ தரப்பில் கங்குலி வெளியிட்ட தகவலில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இந்தியாவில் கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement