ஜடேஜாவுக்கு பதில் இங்கிலாந்து டெஸ்டில் இவர் விளையாடுறதுதான் கரெக்ட்டா இருக்கும் – நீங்க என்ன சொல்லறீங்க ?

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. உலக ரசிகர்களின் பார்வை தற்போது இந்த டெஸ்ட் தொடரின் மீது உள்ள நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் சார்பாக யார் ? யார் ? விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் பௌலிங் வரிசை பலமாக இருக்கும் வேளையில் பேட்டிங்கில் யார் ? யார் ? களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த இங்கிலாந்து மைதானத்தில் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடியது இந்திய அணி செய்த தவறு என்று சிலர் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் நாளைய போட்டியில் நிச்சயம் அஸ்வின் மட்டும்தான் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

அப்படி அஸ்வின் மட்டும் இடம் பெறும் வேளையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஜடேஜா இங்கிலாந்து மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் யோசனையில் உள்ளது. அதே வேளையில் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் சற்று பேட்டிங் செய்யவும் தெரிந்து இருந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் அனுகூலம் என்றே கூறலாம்.

Thakur

அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரின் போது பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட தாக்கூர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றால் அது இந்திய அணிக்கு பலம் என்றே கூறலாம். ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்திலேயே சமாளித்து சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் விளாசிய அவர் நிச்சயம் தன்னிடம் பேட்டிங் திறன் உள்ளது என்று அந்த தொடரின் மூலம் நிரூபித்தார்.

Thakur

இதன் காரணமாக அவர் இங்கிலாந்து தொடரில் தேர்வானால் அது இந்திய அணிக்கு நல்லதாகவே இருக்கும். ஜடேஜாவுக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் களமிறங்கும் பட்சத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராகவும் செயல்படுவார் அதே வேளையில் பேட்டிங்கிலும் பங்களிப்பை அளிப்பார் என்று நம்பலாம். இது குறித்து உங்களது கருத்து என்ன ?

Advertisement