ஷர்துல் தாகூர்.. நிதீஷ் ரெட்டி.. பிளேயிங் லெவனில் இரண்டு பேரில் யாருக்கு இடம்? – விவரம் இதோ

Shardul and Nitish
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரானது இந்திய அணிக்கு அடுத்த அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறியும் தொடராக இந்த தொடர் மாறியுள்ளது.

ஷர்துல் தாகூர்.. நிதீஷ் ரெட்டி.. இருவரில் யாருக்கு இடம்? :

இந்த தொடரின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? ஆல் ரவுண்டர்களாக யார் விளையாடப் போகிறார்கள்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் தற்போது நிலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளையாடப் போகும் அந்த ஒரு வீரர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

தற்போதைய இந்திய அணிகயில் ஷர்துல் தாகூர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக இடம் பிடித்துள்ள வேளையில் இந்த இருவரில் யாருக்கு இடம்? என்கின்ற போட்டி நிலவுகிறது. நிதீஷ் ரெட்டியை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அறிமுகமாகி 5 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்து அசத்தியிருந்தார்.

பேட்டிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இங்கிலாந்து மண்ணில் அவரால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதே வேளையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதனாலும் ஏற்கனவே அவர் இங்கிலாந்து மண்ணில் பல போட்டிகளில் விளையாட அனுபவம் உடையவர் என்பதனாலும் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

குறிப்பாக பந்துவீச்சில் ஸ்விங் செய்து அட்டகாசமாக வீசும் அவர் ஒரு விக்கெட் டேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் பின் வரிசையில் அவரால் கணிசமாக ரன்களை குவிக்க முடியும் என்பதனால் நிதீஷ் ரெட்டியை தாண்டி அவருக்கு ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட் உள்ளது.

இதையும் படிங்க : இந்த சேன்ஸை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்வேன்.. நான் ரெடியா இருக்கேன் – கருண் நாயர் பேட்டி

அதுமட்டுமின்றி நிதீஷ் ரெட்டியால் டெஸ்ட் போட்டிகளில் நிறைய ஓவர்களை வீச முடியாது. அதேவேளையில் ஷர்துல் தாகூரை பொறுத்தவரை நாளொன்றுக்கு 20 ஓவர்கள் மேல் வீசும் திறன் இருப்பதால் அவருக்கே இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement