டெஸ்ட் கிரிக்கெட்டில் பறிபோகும் ஹார்டிக் பாண்டியாவின் இடம். கோலி போட்டுள்ள புது பிளான் – வொர்க் ஆகுமா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாட்டிங்காம் நகரில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன. அதன்படி துவக்க வீரராக ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்த அஸ்வினை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா விளையாடிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி இங்கிலாந்து போன்ற மைதானங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம் என்ற காரணத்தினால் சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

INDvsENG

- Advertisement -

இதன் காரணமாக இசாந்த் சர்மா அணியில் இருந்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் இந்த போட்டியில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்து உள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் அயல் நாட்டு மைதானங்களில் ஹார்டிக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்திருந்த இந்திய அணிக்கு மாற்று வீரராக தற்போது ஷர்துல் தாகூர் செயல்பட இருப்பதாக தெரிகிறது.

ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரின் போது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்திய பின்னர் அவரை ஆல்-ரவுண்டராக மாற்ற வேண்டுமென சுனில் கவாஸ்கர் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் பவுலராகவும் மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் கோலி பரிசோதிக்க உள்ளார். இந்த தொடரில் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரராக தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

Thakur 1

மேலும் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹார்திக் பாண்டியா ஏற்கனவே டெஸ்ட் அணியில் விளையாடி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னர் தற்போது வரை அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பவில்லை. மேலும் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவரால் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. இதற்கு காரணமாக கோலி இந்த முடிவை எடுத்துள்ளது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது இந்த தொடரின் முடிவில் தெரியவரும்.

Thakur

மேலும் கிரிக்கெட் நிபுணர்கள் சிலர் ஷர்துல் தாகூரை இந்திய அணியில் தேர்வு செய்வது நல்லது என்றும் அவரால் பந்துவீச்சில் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும், அது மட்டுமின்றி பேட்டிங்கில் கணிசமான ரன்களை குவித்து அணிக்கு ஒத்துழைக்க முடியும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement