தோனியை இந்திய அணியின் கேப்டனாக மாற்ற சொன்னதே இவர்தான் – ரகசியத்தை உடைத்த ஷரத் பவார்

Pawar
- Advertisement -

பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் அணியின் உறுப்பினருமான சரத் பவார் தோனி கேப்டன் பதவி எப்படி வழங்கப்பட்டது என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தினார். சரத்பவார் 2005 முதல் 2008 வரை பிசிசிஐ அணியின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில காலம் ஐசிசி அணியின் தலைவராகவும் இருந்தார் என்பது தனிச்சிறப்பு. இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த பேட்டியில் மகேந்திர சிங் தோனி எப்படி கேப்டன் ஆனார் என்பதை சமீபத்தில் கூறியுள்ளார்.

pawar 2

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : 2007ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. நான் அப்போது இந்திய அணியுடன் தான் இருந்தேன் ஒருநாள் டிராவிட் எனது அறைக்கு வந்து தயவு செய்து என்னை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து விடுங்கள். கேப்டனாக இருக்கும் வரை என்னால் பேட்டிங் சரியாக செய்ய முடியாது. என்னுடைய பேட்டிங் கவனம் கேப்டன்சி பதவியால் சிதறுகிறது என்று அவர் என்னிடத்தில் தனிப்பட்ட வகையில் எடுத்துக் கூறினார்.

டிராவிட் தனது கேப்டன் பதவியை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கேட்டவுடன், நான் உடனடியாக சச்சினிடம் சென்று நீங்கள் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்போது அவரும் என்னால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி வேண்டாம் என்று சொல்லும் வேளையில் , ஒருகட்டத்தில் கடுப்பாகி வேறு யாருக்கு தான் கேப்டன் பதவி கொடுப்பது என்று கேட்டதற்கு , சச்சின் டெண்டுல்கர் தான் கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனிக்கு கொடுங்கள். அவர் சரியாக அதை செய்வார் , எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று என்று என்னிடம் கூறினார்.

pawar 1

அதன்படி 2007 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்ததும் , சச்சின் கூறியதுபோல் மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அவரும் அதை ஏற்று அது 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வென்று இந்திய அணிக்கு மாபெரும் பெயரை ஈட்டித் தந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

Dhoni

இவ்வாறு மகேந்திர சிங் தோனி கேப்டனாக நிச்சயம் இந்திய அணிக்கு நற்பெயரை வாங்கித் தருவார் என்று சச்சின் கணித்தது போல இன்று இந்திய அணியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் தோனி திகழ்ந்துள்ளார் என்று சரத்பவார் கூறி முடித்தார்.

Advertisement