
இந்திய அணி தற்போது உலக கிரிக்கெட் அணிகளுக்கு சவால் விடும் வகையில் உடற்தகுதி கொண்ட அணியாக விளங்கி வருகிறது. இதற்கு காரணம் யாரெனில் 2015ம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் ஃபிட்னஸ் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சங்கர் பாசு தான்.
அவர் உடல் பயிற்சியின் கீழ் வலிமை மற்றும் கண்டிஷனிங் ஆகியவை இந்திய அணிக்கு சிறப்பாக இருந்தது. மேலும் வீரர்கள் சிறப்பான உடல் தகுதியுடன் இருந்துவருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருடன் சங்கர் பாசுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இவரது உடற்பயிற்சியின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் உடல் வலிமையோடு தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சங்கர் பாசு பதவி காலம் முடிவடைந்தால் இந்திய அணியை விட்டு விலகினார். இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணி வீரர் குறித்தும் அவர்களது வலிமை குறித்தும் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்தவரைக்கும் கேப்டன் கோலி அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக உள்ளார்.
ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தார். மேலும் எந்தவித சாக்குபோக்கு மின்றி அவரது உடற் தகுதியில் மிக கவனமாக இருந்தார். பிட்னஸ் பயிரியிற்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து ஒருநாள் கூட அவர் எந்தவித விடுப்பும் எடுத்தது கிடையாது. அந்த அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்தார் அதனாலே அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது. மேலும் அவரிடம் உள்ள பிட்னஸ் மற்ற உலக அணிகள் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது என்று சங்கர் பாசு கூறினார்.