நான் சரிவர விளையாடவில்லை என்றாலும் எனக்கு வாய்ப்பளித்த இவர்களுக்கு நன்றி – ஷேன் வாட்சன் உருக்கம்

Watson
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்த பேச்சு ஆரம்பமானதிலிருந்தே சிஎஸ்கே அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. முதலில் துபாய் சென்ற அணியில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பதால் இந்த தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறி விடுமோ என்ற பயத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது நல்ல விடயமாக வீரர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு தாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலைமை சரியாக இருந்தாலும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் விலகலால் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும் சென்னை அணி அவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களை தயார் செய்து உறுதியாகவே இருக்கிறது என்று அணி நிர்வாகத்தில் உரிமையாளர் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்தும், சிஎஸ்கே அணியில் துவக்க வீரரான வாட்சன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

சென்னை அணி வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எப்பேர்ப்பட்ட நெருக்கடிகளையும் சாதாரணமாக சமாளிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள். சென்னை அணியில் தற்போது நெருக்கடி உள்ளது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அப்படி எந்த நெருக்கடியும் கிடையவே கிடையாது. எங்கள் அணி கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் வாய்ந்த ஒரு அணி என்று வாட்சன் கூறியுள்ளார். மேலும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சிறப்பான ஆட்டத்தை சிஎஸ்கே அணியால் வெளிப்படுத்த முடியும். அதுதான் சிஎஸ்கே அணியின் பலம்.

Fleming

முந்தைய சீசன்களை விட இப்போதுதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த பல வருடங்களாக நான் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வருகிறேன். எனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து சென்னை அணிக்காக சிறப்பாக செயல்படுவேன். கடந்த 4 ஆண்டுகளாக டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வரும் நான் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக சரிவர சோபிக்க முடியவில்லை.

- Advertisement -

ஆனாலும் அணி நிர்வாகமும் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் என்னை விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக இருந்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தனர். நான் சரிவர விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வரும் அவர்களுக்கு நன்றி என்று சொல்வது பத்தாது. கடந்து 2018 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

Fleming 1

அந்த தொடரின் இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததை என்னால் மறக்கவே முடியாது. இருப்பினும் கடந்த ஆண்டு என்னால் முழுமையாக சோபிக்க முடியாமல் போனதால் இந்த ஆண்டு என்னால் முடிந்தவரை சிஎஸ்கே அணிக்கு முழு பங்களிப்பையும் அளிப்பேன். மேலும் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement