நான் இதுவரை விளையாடியதில் எனக்கு பிடித்த கேப்டன்கள் இந்திய வீரர்களான இவர்கள்தான் – வாட்சன் ஓபன் டாக்

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் 2002 ஆம் ஆண்டு பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு ஆல்-ரவுண்டராக அறிமுகமானார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக சில ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் வாட்சன்.

Watson

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக பாண்டிங், கிளார்க் மற்றும் ஸ்மித் என பலரது கேப்டன்சி ஆஸ்திரேலிய அணிக்காக வாட்சன் விளையாடியிருக்கிறார். உலகஅளவில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாட்சன் ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வாட்சன் அந்த கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும் தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

Watson

இந்நிலையில் இதுவரை தான் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் என பலரது கேப்டன்சியில் விளையாடி இருப்பதாகவும் அதில் சிறந்த கேப்டனை தற்போது யார் என்பதையும் தெரிவித்துள்ளார். அதன்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் கிரிக்கெட்டை மிகவும் அனுபவித்து விளையாடி வருகிறேன்.

- Advertisement -

மேலும் ஷேன் வார்ன், ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய வீரர்களான டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் நால்வரின் கேப்டன்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரரான அவர் ஆஸ்திரேலிய கேப்டன் இரண்டு பேரையும் அதற்கு அடுத்து இந்தியாவின் முன்னணி வீரர்களான டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் தலைமையில் விளையாடுவது பிடிக்கும் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Watson

மேலும் இந்த வருடம் சென்னை அணிக்காக விளையாட இருக்கும் வாட்சன் தனது அதிரடி மூலம் ரசிகர்களை மகிழ்விப்பார் என்றும் தெரிகிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் காலில் ரத்தத்துடன் பேட்டிங் செய்த வாட்சனின் அர்ப்பணிப்பு ரசிகர்களை மிகவும் நிகழ்ச்சிக்கு உள்ளாக்கி அவரின் பெயரை உச்சிக்குக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement