நான் ஆடியதிலேயே இவருடைய பந்துவீச்சு மிகவும் கடினமாக இருந்தது – ஷேன் வாட்சன் ஓபன் டாக்

Watson-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐபிஎல் தொடர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வங்கதேசத்தில் பிரிமியர் லீக் என பல 20 ஓவர் தொடர்களில் ஆடி வருகிறார்.

Watson

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடுவது போல பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த அணிதான் கடந்த முறை டைட்டிலை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் இவர் 12 போட்டிகளில் ஆடி 430 ரன்களை குவித்து தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் நாளை துவங்க இருக்கிறது. இந்நிலையில் இதே அணியில் முகமது ஹசன் என்ற இளம் பந்துவீச்சாளர் இருக்கிறார் . வேகப்பந்து வீச்சாளரான அவருடைய பந்துவீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொண்டுள்ளார் ஷேன் வாட்சன்.

hasnain

அப்போது அவருடைய பந்துவீச்சு மிகவும் கடினமாக இருந்ததாகவும். தனது நிலையை இவருடைய பந்துவீச்சு சற்று திக்குமுக்காட வைத்ததாகவும் பேசியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முகமது ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு சென்ற வருடம் உலக கோப்பை தொடரில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement