பிரித்திவி ஷா இதை செஞ்சா இந்திய கிரிக்கெட்டின் ஹீரோவாகலாம்.. பீட்டர்சன் போல ஷேன் வாட்சனும் அட்வைஸ்

Shane Watson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தற்சமயத்தில் பெரிய சரிவை சந்தித்துள்ளார். 2018 அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு கேப்டனாக உதவிய அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்தார். அதனால் இந்தியாவின் அடுத்த சச்சின் மற்றும் சேவாக் என்று அவர் சில முன்னாள் வீரர்களிடம் பாராட்டுகளையும் பெற்றார்.

இருப்பினும் அதை சில வருடங்கள் கூட தக்க முடியாத அளவுக்கு தடுமாற்றமாக விளையாடிய அவரை இந்திய அணி கழற்றி விட்டது. அதை அடுத்து ஐபிஎல் தொடரிலும் ப்ரித்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால் 2025 சீசனில் எந்த அணியும் வாங்கவில்லை. அது போக ஃபிட்னஸ் கடை பிடிக்காத காரணத்தால் மும்பை அணி ரஞ்சிக் கோப்பை உள்ளூர் அணியிலிருந்து கூட கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

கெவின் பீட்டர்சன் அட்வைஸ்:

அந்த நிலையில் பிரித்திவி ஷா கடுமையாக உழைத்தால் மீண்டும் வர முடியும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சில சிறந்த கதைகள் கம்பேக் கதைகளாக இருந்துள்ளன. பிரித்திவி ஷா பற்றிய அக்கறையான நபர்கள் அவரை சுற்றியிருந்தால், அவரை உட்கார வைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு அவரிடம் சொல்ல வேண்டும்”

“பின்னர் ஃபிட்டாக இருப்பதில் முழுமையான கவனத்தை அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அது அவரை வெற்றிகரமான பாதையில் திரும்பி அழைத்துச் செல்வதற்கான வழியை கொடுக்கும். ஏனெனில் பிரித்திவி ஷா இந்த நிலைமையை தூக்கி எறியும் திறமைசாலி. அன்புடன் கெவின் பீட்டர்சன்” என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனும் அவருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாட்சனும் அட்வைஸ்:

இது பற்றி அதே கருத்தின் கீழ் வாட்சன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உங்களது கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன் கெவின் பீட்டர்சன். பிரித்திவி ஒரு திறமைசாலி. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவராக மாறுவதற்கு இவை அனைத்தும் அவருக்கு தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தப்பாத டிராவிட் குறி.. 13 வயது வீரர் 79 ரன்ஸ்.. தோனி போல இந்தியாவுக்காக அசத்திய 2 வீரர்கள்

அதாவது பீட்டர்சன் சொல்வது போல கடுமையாக உழைத்து ஃபிட்னஸை கடைப்பிடித்தால் பிரித்திவி ஷா ஹீரோவாக வர முடியும் என்று வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது போக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் சமீபத்தில் அவருக்கு கம்பேக் கொடுக்கும் ஆலோசனையுடன் கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் முன்னாள் வீரர்களின் ஆதரவை பெற்றாவது அவர் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement