திறமை இருந்தும் தடுமாறும் உங்களோட பிரச்சனையே அது தான், அதுல இருந்து வெளியே வாங்க – ராகுலுக்கு ஷேன் வாட்சன் ஆலோசனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக விளையாடி வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. முன்னதாக நடைபெற்ற உலகக் கோப்பையில் பேட்டிங் துறையில் விராட் கோலி, சூர்யாகுமார், ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. அதிலும் குறிப்பாக துணை கேப்டனாகவும் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் விளையாடிய கேஎல் ராகுல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியை தவிர்த்து பெரிய அணிகளுக்கு எதிராக அழுத்தமான எஞ்சிய போட்டிகளில் சொதப்பியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

KL Rahul

- Advertisement -

சீனியர் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி கடந்த 2019 முதல் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்த இவரது ஐபிஎல் மார்க்கெட் அனைவரையும் மிஞ்சி 17 கோடி என்ற உச்சகட்டத்தை எட்டியது. அதனால் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய அவர் நாளடைவில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரண்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது அல்லது அழுத்தமான முக்கிய போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டுவது என்ற அணுகு முறையில் விளையாடி வருகிறார்.

பயமே பிரச்சனை:

அத்துடன் பெரிய அணிகளுக்கு எதிராக திணறும் அவர் கத்துக் குட்டிகளை அடித்து நொறுக்கி காலத்தை தள்ளுவதாக ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே அடிப்பார் என்றும் செல்பிஷ் என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இத்தனைக்கும் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஜாம்பவான்களால் போற்றப்படும் அளவுக்கு திறமை கொண்ட ராகுல் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதே அவருக்கு பின்னடைவை கொடுக்கிறது. இந்நிலையில் திறமை இருந்தும் தடுப்பாட்டம் அதாவது பயத்துடன் டிஃபன்ஸ் ஆட நினைப்பதே ராகுல் தடுமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

Watson-1

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுலுக்கு நான் சொல்லும் விஷயம் – அவர் போட்டியை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடும் போது சிறந்தவராக இருக்கிறார். அதனால் ஸ்ட்ரைக்கை மாற்றுவது அல்லது அதிகப்படியான தடுப்பாட்டத்தை போடுவது ஆகிய அணுகு முறைகளை அவர் முயற்சிக்கக் கூடாது. அவர் பயமின்றி விளையாடும் போது எதிரணி பவுலர்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுவார். ஏனெனில் பவுலர்கள் எப்படி வீசினாலும் அதை பவுண்டரி அல்லது சிக்ஸர்களாக அடிப்பதற்கு அவரிடம் ஏராளமான ஷாட்டுகள் உள்ளது. ஆனால் ராகுல் தடுப்பாட்டம் ஆடலாம் என்று தனது மனதில் நினைக்கும் போது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஏற்படும் அதே பதற்றம் அவருக்கும் ஏற்பட்டு பலவீனமும் தடுமாற்றமும் வெளிவந்து விடுகிறது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல அற்புதமான திறமை இருந்தும் கேஎல் ராகுல் பயத்துடன் விளையாடுவதே அவருடைய தடுமாற்றத்திற்கு காரணம் என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் 2019 ஐபிஎல் தொடரில் 659 ரன்களை 158.41 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அதே ராகுல் அதற்கடுத்த சீசனங்களில் முறையே 135.36, 129.34, 138.80 என பெரிய ரன்களை குவித்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். குறிப்பாக இந்த வருடம் லக்னோ அணிக்காக 616 ரன்களை குவித்த அவர் அதை 135.38 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார்.

Rahul-1

இதிலிருந்து ஒன்று தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் அவர் விளையாடுகிறார் அல்லது தனது அணியை வெற்றி வைக்க எப்படியாவது பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற பயம் கலந்த எண்ணத்துடன் விளையாடுகிறார் என்பது தெளிவாகிறது. இந்த எண்ணத்தை விட்டுவிட்டு பவுலர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினாலே மீண்டும் அவர் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பது நிதர்சனம்.

Advertisement