கிழிந்த ஷூவுடன் விளையாடிய முகமது ஷமி. விளக்கத்தை சொன்ன ஷேன் வார்ன் – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்களை குவித்தார். அதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ashwin

- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் அடித்த 9 ரன்களுடன் சேர்த்து 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மேலும் மூன்றாவது நாள் நாளை நடைபெறும் போட்டியில் முழுநேரமும் விளையாடி இந்திய அணி பெரிய ஸ்கோரை குவிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்த முடியும். இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடது காலில் கிழிந்த ஷூ அணிந்துகொண்டு விளையாடினார். இதனை கவனித்த கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கினர்.

Shami 1

இதனிடையே ஏன் அந்த கிழிந்த ஷூவை ஷமி பயன்படுத்துகிறார் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கிழிந்த ஷூவை அவர் அணிந்து விளையாடுவது அவரது ஆட்டத்தின் வியூகம் என்று அதைச் சொல்லலாம். பந்தை ரிலீஸ் செய்யும் போது சரியான லேண்டிங் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஷமி அதனை செய்துள்ளார்.

அவர் “HIGH ARM” பௌலிங் ஆக்சன் இல் பந்துவீசுபவர் எனவே பந்தினை ரிலீஸ் செய்யும்போது எந்த இடர்பாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக இதைச் செய்திருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளார். முதல் இன்னிங்சில் மொத்தமாக 17 ஓவரை வீசிய ஷமி நான்கு மெய்டன் ஓவர்களை வீசினார். மொத்தமாக 41 ரன்களை விட்டுக் கொடுத்த அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை கட்டுக்குள் வைத்திருந்தார் என கூறலாம்.

Advertisement