உலகின் தலைசிறந்த டீம்னா அது இதுதான். இவங்க அதுக்கு தகுதியானவங்க – ஷேன் வார்ன் புகழாரம்

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக, கிரிக்கெட் குறித்த கருத்துக்களை அளித்துவரும் விமர்சகராகவும், பயிற்சியாளராகவும், கிரிக்கெட் ஆலோசகராகவும் என பல்வேறு பரிமாணங்களில் கிரிக்கெட் தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணி எது ? என்பது குறித்த தனது கருத்தினையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Warne 1

- Advertisement -

அதன்படி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து ஷேன் வார்ன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : விராட் கோலி மற்றும் இந்திய அணி மீண்டும் ஒரு முறை சிறப்பான வெற்றியை பெற்று உள்ளீர்கள். இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் நீங்கள்தான் கடந்த 12 மாதங்களாக உங்களது ஆட்டம் சிறப்பாக உள்ளது. நிச்சயம் நான் தெளிவாக செல்வேன் இந்திய அணி தான் தற்போது உள்ள கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணி. இதை நான் சொல்வதற்கு தகுதியான அணி நீங்கள்தான்.

டெஸ்ட் கிரிக்கெட் உங்களால் நிச்சயம் நீடிக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேலையில் ஷேன் வார்ன் வாழ்த்து தெரிவித்துள்ளது தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் அணி வீரர்கள் என ஒட்டுமொத்த வீரர்களின் உழைப்பினால் கிடைத்த இந்த வெற்றியை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement