தற்போதைய கிரிக்கெட் உலகின் டாப் 3 வீரர்களில் இவரும் ஒருவர் – இந்திய வீரரை புகழ்ந்த ஷேன் வார்ன்

Warne
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா முதுகுவலி பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் அறுவை சிகிச்சை செய்தார். இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக பாண்டியா கிரிக்கெட் விளையாடவில்லை. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார்.

Pandya-3

- Advertisement -

அப்போதும் இவர் பேட்டிங் மட்டுமே செய்தார், இவரால் முழுமையாக பந்துவீச முடியவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தனது முழுமையான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி t20 தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெறும் 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கொண்டு விளையாடியது. 6வது பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருந்தார். இருப்பினும் இவர் டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. தற்போது இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் பேசியுள்ளார்.

pandya 1

அப்போது அவர் கூறுகையில் “ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பந்துவீச்சு காரணமாக இவரை டெஸ்ட் தொடரில் எடுக்கவில்லை. இவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் டாப் 3 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருடைய அதிரடியான ஆட்டத்தை அனைவரும் பார்த்திருப்போம். டெஸ்ட் போட்டியில் அவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்தேன்.

Pandya

விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அணியில் இல்லாதபோது ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கைக்கொடுப்பார். இவர் மிகவும் சாந்தமான வீரர்” என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார்.

Advertisement