கொல்கத்தாவில் இவர்கள் இருவர் அடித்த அடியை மறக்கவே முடியாது – இந்திய அணிக்கு எதிரான அனுபவத்தை பகிர்ந்த வார்னே

warne
- Advertisement -

கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஜோடியான லட்சுமணன் மற்றும் டிராவிட் ஆகியோர் விளாசி தள்ளியது குறித்து தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Warne 1

- Advertisement -

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அந்த தொடரின் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் ஃபாலோ ஆன் பெற்றது. அதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

தோல்வியே முடிவு என்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் ஒரு நாள் முழுக்க விளையாடி 376 ரன்களை குவித்தனர். மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

dravid

இந்த டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய வார்னே 34 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 152 ரன்கள் விட்டுக் கொடுத்தா.ர் இந்நிலையில் அந்த போட்டி குறித்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஷேன் வார்னே அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் : பந்து வீச்சை முடித்த பின்பு நான்காயிரம் ஓவர்களை வீசியது போல ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

மைதானம் முழுக்க பந்துகளை அவர்கள் இருவரும் அடித்து விளாசினார்கள். அப்போது நான் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தபோது கில்க்ரிஸ்ட் இடம் பிடித்த பிடித்த திரைப்படம், பிடித்த பாடல்கள் என பலவற்றை பேசிக் கொண்டோம், மேலும் தொப்பிகளையும் மாற்றிக்கொண்டோம் மிக முக்கியமாக அந்த போட்டியில் இவர்கள் இருவரையும் விளையாடுவதை மறக்க முயற்சித்தோம் என கூறியுள்ளார்.

Dravid 1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : லக்ஷ்மணனும், டிராவிடும் மிக அழகாக அந்த போட்டியில் ஒரு நாள் முழுக்க விளையாடினார்கள். அதிலும் லட்சுமணன் பேட்டிங் மிக முக அழகு. டிராவிட் மிகப் பிரமாதம். சில நேரங்களில் நாம் அந்த ஆட்டத்தை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவு சிறப்பாக அவர்களுடைய பேட்டிங் அமைந்தது என்று ஷேன் வார்னே நினைவுகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement