இது மட்டும் நடந்தா இந்திய அணி முதல் நாளிலே ஆல்அவுட் ஆய்டும் – எச்சரித்த ஷேன் பாண்ட்

Bond
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கின்றது. இந்த இறுதிப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே முன்னாள் வீரர்கள் பலரும் இந்த போட்டி குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஷேன் பான்ட், இந்த இறுதிப் போட்டியில் ஒரு விடயம் மட்டும் நியூசிலாந்து அணிக்கு சாதகாமாக அமைந்தால் அவர்கள் இந்திய அணியை முதல் நாளன்றே 200 ரன்களுக்குள் ஆல் அவுட் எடுத்து விடுவார்கள் என்று தனது கருத்தை கூறியுள்ளார்.

INDvsNZ

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதை தீர்மானிக்க டாஸ் ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. தற்போது இது குறித்துதான் பேசியிருக்கிறார் ஷேன் பாண்ட். அந்த பேட்டியில் பேசிய அவர், நியூசிலாந்து அணியானது டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தால், இந்த இறுதிப் போட்டியானது ஐந்து நாட்கள் வரை நடைபெறாது.

அதுவே இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தால், போட்டி முடிய கொஞ்சம் அதிக நேரம் ஆகும். இந்திய அணியின் பந்து வீச்சு மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே அட்வான்டாஜ் என கூறிய அவர், இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாளே ஆல் அவுட் ஆகும் என்றும் கூறியிருக்கிறார். அதில் மேலும் பேசிய அவர் கூறியதாவது,

ind

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசினால், நிச்சயமாக இந்திய அணியானது 200 ரன்களுக்குள்ளாகவே ஆல் அவுட்டாகிவிடும். நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் விளையாடிவிட்டு வந்திருப்பதால் அவர்களுக்கு தான் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்திய அணியானது முதல் நாளன்றே ஆல் அவுட்டாகும் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

IND

இதற்கு முன்னராக பேட்டியளித்திருந்த நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டீட், இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற டெஸ்ட் வெற்றியானது எங்களுக்கு எந்த விதமான அட்வான்ட்டேஜையும் தரவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நாளை மாலை இந்திய நேரப்படி சரியாக 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

Advertisement