தனது டாப்லெஸ் புகைப்படத்தினை வெளியிட்ட ஷமியின் மனைவி

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் இன்னும் பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லை. மீண்டும் அந்த பஞ்சாயத்து தலை எடுத்துள்ளது. ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜகானுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் 2017ம் ஆண்டு முதல் இந்த இருவருக்கும் பிரச்சினை தான். இவரது மனைவி ஹசின் ஜகான் ஷமி மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அத்துமீறல்களை பதிவு செய்து இருந்தார். மேலும், சமி மேட்ச் பிக்சிங் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இதனை விசாரித்த பிசிசிஐ அப்படி எதுவும் அவர் செய்யவில்லை என்பதையும் உறுதி செய்தது.

- Advertisement -

இந்நிலையில் ஷமியிடம் இருந்து ஹசின் ஜகான் பிரிந்து வந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷமியை பிரிந்து வாழ்ந்து வருவதால் மீண்டும் தனது மாடலிங் தொழில் பக்கம் திரும்பியுள்ளார் ஹசின் ஜகான். மேலும், கிளாமராகவும் போஸ் கொடுத்து வந்தார்.

இதனால் மத அடிப்படைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட (முழு நிர்வாணமாக) அரைநிர்வாணமாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஹசின் ஜகான். அப்படிப் பதிவு செய்துவிட்டு முகமது ஷமிக்கு ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,…

- Advertisement -

உன் கையில் ஒன்றுமே இல்லாத போது நான் சுத்தமானவளாக தெரிந்தேன். தற்போது நீ ஒரு பெரிய ஆளாக இருக்கிறாய். இந்தநிலையில் நான் உனக்கு சுத்தம் இல்லாதவனாக இருக்கிறேன். அந்த அளவிற்கு சென்று விட்டேனோ? பொய்கள் எப்போதும் உண்மைகளை மறைத்து விட முடியாது. உன் முதலைக்கண்ணீர் தான் நீண்ட நாளைக்கு வடிக்கப்படும் என்பது போன்று தெரிவித்துள்ளார் ஹசின் ஜகான்.

இந்த புகைப்படத்தை பார்த்த முகமது ஷமியின் ரசிகர்கள் அவரை கண்டபடி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement