இந்திய வீரரான முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுப்பு. காரணம் இதுதான் – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

Jadeja

- Advertisement -

இதற்காக இந்திய அணி வீரர்களின் அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் விசா கிடைத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விசா மறுக்கப்பட்டது. அதன் காரணத்தையும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டது. அதன்படி முகமது ஷமி மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே ஆன பிரச்சனை குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவருக்கு விசா வழங்க முடியாது என்று பதிலளித்திருந்தது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இந்தியாவுக்காக ஷமி படைத்த சாதனைகள் மற்றும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு குறித்த விளக்கம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விசா வழங்குமாறு வேண்டுகோள் வைத்தது இந்திய அணி நிர்வாகம்.

Shami

இதனை ஏற்ற அமெரிக்க தூதரகம் அவருக்கு விசா வழங்க அனுமதித்துள்ளது. இந்திய வீரர் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஜஹான் ஆகியோருக்கு கடந்த வருடம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது அவருடைய மனைவி ஷமி மீது கொடுமைப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement