- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்க எந்த நிலைமைல இருந்தாலும் எங்களுக்கு பயம் கிடையாது – கெத்தாக பேசிய இந்திய வீரர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய, 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட்டாக அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 432 ரன்களை குவித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணியை விட அவர்கள் 354 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதால் தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்நேரத்தில் கூட இந்திய அணியை விட்டுக்கொடுக்காமல் 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறுகையில் :

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சரியாக செயல்படாது அணியின் வீரர்களுக்கு இடையே எந்த ஒரு மனச்சோர்வையும் ஏற்படுத்தாது. நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மூன்று நாட்களில் ஏன் இரண்டு நாட்களில் கூட போட்டியை முடித்துள்ளோம். ஏதோ ஒரு போட்டியில் தவறு நடந்தால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இந்த தவறுகளை சரி செய்து விளையாடுவோம்.

இப்போதும் இந்த தொடரில் நாம் தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளோம். அதனால் இந்த போட்டி குறித்து வேதனைப்பட ஒன்றுமில்லை. நிச்சயம் இந்த போட்டியில் எங்களால் முடிந்தவரை கடுமையான போராட்டத்தை அளிக்க முடியும் என ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by