IND : உலகக்கோப்பை தொடரில் எனது பந்துவீச்சு இப்படிதான் இருக்கும்- ஷமி சவால்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

Shami
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

shamii

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பை தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி அவருடைய பந்துவீச்சு இந்த தொடரில் எப்படி இருக்கும் என்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டு அணிக்காக வெற்றி பெற்று தர முயற்சி செய்வேன். மேலும் எனது ஃபிட்னஸ் தற்போது சிறப்பாக உள்ளது. என்னுடைய எடை குறைப்பின் காரணமாக என்னால் முன்பைவிட வேகமாக பந்துவீச முடிகிறது.

Mohammed-Shami

மேலும் தற்போது நான் குறிப்பிட்ட இடத்தில் யார்க்கர் வீச தயாராகி வருகிறேன். என்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் எதிரணியை கட்டாயம் என்னால் கட்டுக்குள் வைக்க முடியும். தொடர்ந்து யார்க்கர் வீசவும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசும் தயாராகி வருகிறேன். ஆகவே இந்தத் தொடரை நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளேன். மேலும் உலக கோப்பை இந்திய அணி வெல்ல இந்த தொடர்பு எனது சிறப்பான பவுலிங் உதவும் என்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று ஷமி கூறினார்.

Advertisement