அவரை பத்தி சும்மா ஜோக் அடிச்சா கூட கோச்சிப்பாரு. அவ்ளோ சீரியஸான ஆளு அவரு – ஷமி பேட்டி

இந்திய அணி ஒரு காலத்தில் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் பலத்தைக் கொண்டு வெற்றி பெற்ற அணியாக இருந்தது. மேலும் குறிப்பிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வந்தனர். அதன் பிறகு 2010 ஆண்டிற்கு மேல் இந்தியாவில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையின் மூலம் வளர்ந்தனர். குறிப்பாக தோனி தலைமையிலான இந்திய அணியில் பல இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உருவானார்கள்.

shami

அவர்களின் ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பல ஆண்டுகளாக இந்திய அணியில் தற்போது விளையாடி வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்களை முதன்மையாக கொண்டு விளையாடி வந்த நிலையில் தற்போது இந்திய அணி பவுலர்களை கொண்டு விளையாடி வருகிறது என்றே கூறலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கு உதவி வருகின்றனர் குறிப்பாக டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகின்றனர். அதுதவிர சிராஜ், சைனி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என ஏகப்பட்ட பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு தற்போது இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமி தனது சக பந்துவீச்சாளர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி கூறியுள்ளார். அதில் நான் இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது மிகவும் கிண்டலாக பேசிக்கொள்வோம். ஒருவரை ஒருவர் கலாய்த்து ஜோக் அடித்துக் கொண்டும் நன்றாக ஜாலியாக பேசிக் கொள்வோம். ஆனால் இதில் பும்ரா மட்டும் சற்று வித்தியாசமானவர்.

- Advertisement -

Bumrah

அவரும் அதிகமாக ஜோக் அடிக்க மாட்டார் நாமும் அவரைப் பற்றி ஜோக் அடித்தால் சுலபமாக எடுத்துக் கொள்ள மாட்டார். சில சமயம் நாங்கள் அவரைப்பற்றி ஜோக் அடிக்கும் போது அவர் சீரியஸாக எடுத்துக் கொள்வார். அதனால் பும்ராவை தவிர்த்து நாங்கள் நால்வரும் ஜாலியாக பேசிக் கொள்வோம் என்று கூறினார். இதன்மூலம் பும்ரா இந்திய அணியில் ஒரு சீரியஸான ஆள் என்றும் முகமது ஷமி வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement