Shami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு – விவரம் இதோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Shami-2
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

Shami

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஷமி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முகமது சமி அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஒருமுறை நான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் சாமி மோசமான பந்து வீசிய போது அவரை தமிழில் திட்டினேன்.

அவரிடம் சென்று ஏன் இப்படி பண்ற உன்னை மாதிரி நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருந்தா எப்படி பந்துவீசி இருப்பனு தெரியுமா ? என்று தமிழ் கோபமாக அவரிடம் கூறினேன். அதை என்ன என்று என்னிடம் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டிருந்தார். மீண்டும் நான் அதனை ஹிந்தியில் சொன்னேன் உடனே கோபத்தில் இங்கிலாந்து விக்கெட்டுகளை எடுக்க ஆரம்பித்தார்.

ashwin

அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடும்பொழுது விக்கெட் எடுக்கவில்லை என்றால் அவரிடம் தமிழில் பொய் கோபமாக பேசுவேன் பிறகு மீண்டும் அவர் அதனைப் புரிந்துகொண்டு ஆக்ரோஷமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் பந்து வீசுவார் இது பலமுறை நடந்துள்ளது என்று அஸ்வின் கூறினார்.

Advertisement