அவரின் சிறப்பான ஆட்டத்தை மறந்துட்டு நீங்க எப்படி பேசலாம். அவர் வேற மாதிரி – சப்போர்ட் செய்த ஷமி

Shami-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்திற்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் பும்ராவின் தற்போதைய செயல்பாடு அவர் பழையபடி இருந்தது போல் இல்லை.

Bumrah

மேலும் இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. மேலும் அவர் அதிக அளவில் ரன்களையும் விட்டுக்கொடுத்தார். இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்தனர். இந்நிலையில் தற்போது டெஸ்ட் தொடருக்கு தயாராகிவரும் இந்திய அணியில் பும்ரா இடம்பெறுவது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சக வீரரான ஷமி இதுகுறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அவர் முன்பு இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் எனும் பெயரில் வேலை செய்பவர்கள் இது குறித்துப் பேச வேண்டாம் என்று ஷமி விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Bumrah

மேலும் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் அவரது திறமை குறித்து சந்தேகப்பட முடியாது. இது 2-4 போட்டிகளுக்கு பின் பேச வேண்டிய விடயம் கிடையாது. அணிக்கு அவர் திறமை மீது நம்பிக்கை உள்ளது. அவர் மீது விமர்சனம் செய்வதும் சரியல்ல என்று ஷமி கூறினார். மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய ஒருவரை எவ்வாறு நீங்கள் மறக்கலாம் மேலும் அவரது பங்களிப்பு எப்படி இல்லாமல் போகும். நீங்கள் இவ்வாறு சிந்திப்பது அவர் மனதை பாதிக்கும் என்றும் ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement