மைதானத்தில் டவல் கட்டிக்கொண்டு நின்றிருந்த முகமது ஷமி – இந்த வினோத்துக்கு காரணம் என்ன தெரியுமா ?

Shami 3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் குவிக்க தற்போது தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ள நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை விட தற்போது நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

shami 2

- Advertisement -

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்த நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் இருக்க இன்றைய ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்தனர். குறிப்பாக முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட் என நியூசிலாந்து அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்க தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பவுண்டரி லைனில் பீல்டிங் நிற்கையில் தன் உடம்பில் டவல் சுற்றியவாறு நின்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Shami 4

இதற்கான காரணம் யாதெனில் தற்போது சவுதாம்ப்டன் நகரில் உள்ள தட்பவெட்ப நிலை மிகவும் குளிராக இருப்பதினால் தனது உடல் சூட்டினை சமமாக வைத்துக்கொள்ள உடம்பில் டவலை சுற்றி ஷமி நின்று கொண்டிருந்தார்.

Shami 5

மற்ற வீரர்கள் அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து இருந்த நிலையில் பந்துவீச்சாளர்கள் வெறும் ஜெர்சியுடன் இருந்ததால் அதிக குளிர் காரணமாகவே ஷமி டவலை தன் உடம்பில் சுற்றிக் கொண்டு நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement