இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஐந்தாவது நாளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டு நாட்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி ரஹானே மற்றும் கோலி ஆகியோரது உதவியால் 217 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதிவரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் எவ்வாறு கைப்பற்றுவது என்று தெரியாமல் இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி வீரர்கள் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியை அதிர்ச்சி அளித்தார்.

ரோஸ் டைலர், வாட்லிங், கிராண்ட்ஹோம், ஜேமிசன் ஆகியோரது விக்கெட்டை ஷமி வீழ்த்தி தற்போது தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இசாந்த் சர்மாவும் தனது பங்கிற்கு வில்லியம்சன் மற்றும் என்று நிக்கோல்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்த தற்போது நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
இந்திய அணியை விட நியூசிலாந்து அணி தற்போது 15 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பை விரைவில் வழங்கி நியூசிலாந்து அணியை சுருட்ட திட்டம் தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



